மற்ற விசைப்பலகை குறுக்குவழிகள்(Keyboard Shortcuts..continued)

மற்ற விசைப்பலகை குறுக்குவழிகள்(Keyboard Shortcuts..continuation):

1.ctrl+c==>எந்த ஒரு செயல்பாட்டையும் உடனடியாக நிறுத்த உதவுகிறது.

2.ctrl+d==> terminal திரையை மூட  (close) செய்ய உதவுகிறது.

3.மேல் நோக்கிய அம்புக்குறி எப்போதும் நாம் முன்பு பயன்படுத்திய (வரலாறு(history ) commands) ஐ தெரிவு செய்ய உதவுகிறது.

இது தட்டச்சு செய்யும் வேலை நேரத்தை குறைக்கிறது.

1.viki @viki-Linux :-$ who
2.viki@ viki-Linux :-$ whatis python
3.viki@viki-Linux:-$ ls
இங்கே மேல் நோக்கிய அம்புக்குறியினை உபயோக்கிப்பதன் மூலம் who  கட்டளையை மறுபடி தர முடியும்.

இதனை விசைப்பலகை குறுக்கு வழி மூலமும் செயல்படுத்தலாம்.

4. Ctrl+p==> முந்தைய கட்டளை(previous)

5. Ctrl+n==> அடுத்த கட்டளை.

6. Ctrl+ r==>பின்னோக்கிய  தேடல் (ஆங்கிலத்தில் இதனை reverse incremental search from history ) என்பர்.
இவை கணினியின் வரலாற்றில் உள்ள கட்டளைகளை வரிசைக்கிரமமாக தேட உதவும்.

7. Ctrl+y==> இது நீங்கள் வெட்டி எடுத்த ஒரு வரியை அல்லது வார்த்தையை ஒட்ட உதவும்.

8.Alt+y ==> இது நீங்கள் வெட்டி எடுத்த பல வரிகளை  அல்லது வார்த்தைகளை ஒட்ட உதவும்.

இவற்றில் ஒரு சில குறுக்கு வழிகள் ஒரு சில இயங்குதளங்களில் செயல்படவில்லை . நீங்களும் இதைப் போல சிரமங்களை சந்திக்க நேர்ந்தால் இங்கு பதியவும்.

உங்கள் கட்டளைகளை முழுத்திரையில் செயல் படுத்த விரும்பினால் பின்வரும் கட்டளையை உபயோகிக்கவும்.

Ctrl+alt+ f1

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>