குனு/லினக்ஸ் கோப்பு முறைமை மற்றும் அதன் விளக்கங்கள்

 

GNU/Linux
கோப்புளும், அதன் அமைப்பு மற்றும் அதற்கான விளக்கங்கள்:
(மூலம்: கணியம் வலைத்தளம்
Learn GNU Linux-part1.pdf ல் இருந்து பெறப்பட்டது. கிரியேட்டிவ் காமன் உரிமம் மூலம் பயன்படுத்தப்படுகிறது(creative comman license)

லினக்ஸ் -ல் மிக இன்றியமையாததான கோப்புகளின் அமைப்பை பற்றி இங்கே காணலாம்.(file system)
இங்கே அனைத்து வகை தரவுகளும் (தகவல்களும் ) கோப்பாக கருதப்படும்.

இவை
** கணினி புரிந்து கொள்ளும் வகையிலான தரவாகவோ(machine language)
** இரு வகை தரவு (binary data)
**தெரிவு செய்யப்பட்ட கோப்புகளாக (text data) இருக்கும்.

இவற்றை கையாளும் கட்டளைகளை பற்றி இங்கு காணலாம்.

பயனருக்கு மிக இன்றியமையாதது தரவு பாதுகாப்பு(data security). இவற்றை ஒரு பயனர்  மற்றொருவரின் தகவலை பயன்படுத்தாத வண்ணம் அளிக்க கோப்பு முறைமை உதவுகிறது.

முதலில் இதற்கு உண்டான தரவுகளை பார்க்கலாம்.

கோப்பு முறைமை -விளக்கம்(file System):
லினக்ஸ் அதனுடன் தொடர்புடைய அனைத்தும் கோப்புகளாக கருதப்படுவதால் அதனைப் பற்றி இங்கு காண்போம்.

Directory structure:
கோப்பின் அமைப்பு:

படம்:

linux_file_system

1.)     /
இது மூலமான (root) என அழைக்கப்படும்.இதுவே அனைத்து கோப்புகளின் மூலக் கோப்பு (root directory).இதன் மூலம் மற்ற directory களை அணுகுதல் நன்று.
இந்த / என்னும் directory , நமது கணினியை நாம் துவக்கும் போது அதில் உள்ள லினக்ஸ் இயங்குதளத்தின் kernal file (மூலத் தரவு) / boot என்னும் மற்றொரு (directory) மூலம் வன்வட்டிலிருந்து நினைவகத்துக்கு மாற்றுகிறது.(Memory).

இது பின் இயங்குதளமாக உள்ளீடு (load) செய்யப்படுகிறது.

2.)   /bin

     இங்கு executable files என்னும் வெளியீடு கோப்பு காணப்படும். நாம் அளிக்கும் கட்டளைகளை லினக்ஸ் ,” C- நிரலாகவோ” அல்லது” shell script”ஆக சேமிக்கும்.
இதற்கான executable கோப்புகள் இங்கு காணப்படும்.

3.)   /etc

          நமது கணினியை நிர்வாகம் செய்து ஒழுங்குமுறைப் படுத்துவதற்கான configuration files(நிரல் நிறுவும் கோப்புகள் இந்த directory ல் காணப்படும்.
நமது கணினியைப் பயன்படுத்தும் பயனரின் கோப்புகள் ,இணைக்கப்பட்ட கருவிகளைப் பற்றிய (device) கோப்புகள் இங்கு காணப்படும்.

4.) /lib

     நூலக கோப்புகள் என்னும் library files இங்கு காணப்படும்.இவை நிரலாளர்களுக்காக வழங்கப்பட்டவை.(for programmers)
System calls  என்பதன் மூலம் அதனை நமது நிரலில் பயன்படுத்தி கொள்ளலாம்.(system calls ஐ பற்றி பின்னர் பார்க்கலாம்.

5.)  /dev

   உள்ளீடு மற்றும் வெளியீடு செய்வதற்காக  மற்றும் கருவிகள்(devices) நாம் உபயோகிக்கும் கருவிகள்.,தரவை சேமிக்கும் கருவிகள் அதனை பற்றிய கோப்புகள் இங்கு காணப்படும்..

***********மற்றவை அடுத்த தொடரில்***************

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>