புதிய கட்டளைகள்

இன்று புதிய கட்டளை மற்றும் அதன் வெளியீடு ஆகியவற்றை பற்றி பார்ப்போம்.

கோப்பு ஒன்றின் தயாரிப்பு நேரத்தை மாற்றி அமைக்க :
பின்வரும் கட்டளை மூலம் ஒரு கோப்பின் எழுத்தப்பட்ட  நேரத்தை மாற்றி அமைக்கலாம்.

முதலில் ஒரு கோப்பை உருவாக்கி கொள்வோம்.
இங்கே Sample என்றொரு கோப்பை உருவாக்கி கொள்வோம்.

இங்கே Terminal ஐ திறந்து கட்டளையை execute செய்யலாம்.

$ls -l Sample (இக்கட்டளை கோப்பு தயாரிக்கப்பட்ட நேரத்தை தருகிறது.

$ ls -l Sample
-rw-rw-r– 1  viki 133 Nov 2 18:15 Sample
நவம்பர் இரண்டு 6:15 மணிக்கு உருவாக்கப்பட்டது.இதனை மாற்ற பின்வரும் கட்டளையை உபயோகிக்கலாம்

$ touch -t 200412060000 Sample
இங்கு touch என்பது நேரத்தை மாற்ற உதவும் கட்டளை.
2004- வருடம், 12 -மாதம், 06- நாள் ,0000- எதையும்  குறிப்பதில்லை.

Command line History(கட்டளை வரி வரலாறு):
இங்கே நாம் ஒரு கட்டளையை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்த மீண்டும் அதே கட்டளையை தட்டச்சு செய்ய தேவையில்லை.

முன்னர் நாம் பயன்படுத்திய கட்டளைகளை மீண்டும் execute செய்ய (↑) up arrow (மேல் அம்புக்குறி) பொத்தானை அழுத்தலாம்.   ↑ மற்றும் ↓ பயன்படுத்தி கடைசியாக மற்றும் அதற்கு முந்தைய கட்டளைகளை அடிக்காமலேயே execute செய்ய முடியும்.இதனையே நாம் கட்டளை வரி வரலாறு என்கிறோம்.
வலது மற்றும் இடது அம்புக்குறிகள்  கட்டளைகளில் திருத்தங்கள் செய்ய உதவுகிறது.(←→)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>