மேலும் சில கட்டளைகள்

 

இங்கே சில கட்டளைகள் மற்றும் அதன் வெளியீட்டை காணலாம்.

1.ifconfig:
=> இது கணினியின் network configuration ஐ பற்றி தெரிந்து கொள்ளப்
பயன்படுகிறது.
-IP address
-mac address
-broadcast address
-netmask address
போன்ற விவரங்களை தருகிறது.
$ifconfig

viki@viki-ubuntu:~$ ifconfig
eth0 Link encap:Ethernet HWaddr 80:ee:73:37:e8:a4
UP BROADCAST MULTICAST MTU:1500 Metric:1
RX packets:0 errors:0 dropped:0 overruns:0 frame:0
TX packets:0 errors:0 dropped:0 overruns:0 carrier:0
collisions:0 txqueuelen:1000
RX bytes:0 (0.0 B) TX bytes:0 (0.0 B)
Interrupt:27

lo Link encap:Local Loopback
inet addr:127.0.0.1 Mask:255.0.0.0
inet6 addr: ::1/128 Scope:Host
UP LOOPBACK RUNNING MTU:65536 Metric:1
RX packets:3493 errors:0 dropped:0 overruns:0 frame:0
TX packets:3493 errors:0 dropped:0 overruns:0 carrier:0
collisions:0 txqueuelen:0
RX bytes:283182 (283.1 KB) TX bytes:283182 (283.1 KB)

usb0 Link encap:Ethernet HWaddr fe:f1:54:ad:68:0a
inet addr:192.168.42.128 Bcast:192.168.42.255 Mask:255.255.255.0
inet6 addr: fe80::fcf1:54ff:fead:680a/64 Scope:Link
UP BROADCAST RUNNING MULTICAST MTU:1500 Metric:1
RX packets:1132 errors:0 dropped:0 overruns:0 frame:0
TX packets:1364 errors:0 dropped:0 overruns:0 carrier:0
collisions:0 txqueuelen:1000
RX bytes:595611 (595.6 KB) TX bytes:227743 (227.7 KB)
2.man:
Manual என்பதன் சுருக்கமே man கட்டளை. எடுத்துக்காட்டாக man கட்டளை கொண்டு
who ,என்பது மற்றும் அதனை பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
$man who
man uname

UNAME(1) User Commands UNAME(1)

NAME
uname – print system information

SYNOPSIS
uname [OPTION]…

DESCRIPTION
Print certain system information. With no OPTION, same as -s.

-a, –all
print all information, in the following order, except omit -p and -i if unknown:

-s, –kernel-name
print the kernel name

-n, –nodename
print the network node hostname

-r, –kernel-release
print the kernel release

-v, –kernel-version
print the kernel version

-m, –machine
print the machine hardware name

-p, –processor
print the processor type or “unknown”

-i, –hardware-platform
print the hardware platform or “unknown”

-o, –operating-system
print the operating system

–help display this help and exit

–version
output version information and exit

AUTHOR
Written by David MacKenzie.
Manual page uname(1) line 1 (press h for help or q to quit)
===========================================================================
*********************************************************************************************************
2.WHO(1) User Commands WHO(1)

NAME
who – show who is logged on

SYNOPSIS
who [OPTION]… [ FILE | ARG1 ARG2 ]

DESCRIPTION
Print information about users who are currently logged in.

-a, –all
same as -b -d –login -p -r -t -T -u

-b, –boot
time of last system boot

-d, –dead
print dead processes

-H, –heading
print line of column headings

–ips print ips instead of hostnames. with –lookup, canonicalizes based on stored IP, if available, rather than stored hostname

-l, –login
print system login processes

–lookup
attempt to canonicalize hostnames via DNS

-m only hostname and user associated with stdin

-p, –process
print active processes spawned by init

-q, –count
all login names and number of users logged on

-r, –runlevel
print current runlevel

-s, –short
print only name, line, and time (default)
-t, –time
print last system clock change

-T, -w, –mesg
add user’s message status as +, – or ?

-u, –users
list users logged in

–message
same as -T

–writable
same as -T

–help display this help and exit

–version
output version information and exit

If FILE is not specified, use /var/run/utmp. /var/log/wtmp as FILE is common. If ARG1 ARG2 given, -m presumed: ‘am i’ or ‘mom likes’ are usual.

AUTHOR
Written by Joseph Arceneaux, David MacKenzie, and Michael Stone.
info , apropos கட்டளைகள் கொண்டு இதே விவரங்கள் அறியலாம்.

வெளியேற: “q” என்னும் எழுத்தை கொண்டு (அ) ctrl+ d என்னும் keyboard குறுக்கு
வழி கொண்டு வெளியேறலாம்.
3.echo :
echo கட்டளை நாம் கொடுக்கும் உள்ளீட்டை அப்படியே வெளியீடாக தருகிறது.

$echo ” Linux is the Opensource Operating system”

Linux is the Open Source Operating system
viki@viki-ubuntu:~$ echo “Linux is the OpenSource Language”
Linux is the OpenSource Language

4.exit:
இக்கட்டளை shell prompt ல் (நாம் கட்டளைகளை தரும் இடம்)
exit கட்டளை கொடுத்து வெளியேறலாம். அல்லது ctrl+ d என்னும் keyboard குறுக்கு
வழி கொண்டு வெளியேறலாம்.

5.pwd :
Print working directory
நாம் தற்போது இருக்கும் directory ஐ print செய்கிறது.
Directory= “folder”
சாதாரணமாக (by default) நாம் Home directory ல் விடப்படுவோம்.

$pwd

viki@viki-ubuntu:~$ pwd
/home/viki

விக்கிப்பீடியாவில் அங்கோர் வாட் கோவில் : ஓர் விரிவான விளக்கம்

அங்கோர் வாட் (Angkor Wat) என்பது, அங்கோர்,கம்போடியாவில் உள்ள இந்துக்கோயிலாக இருந்து பின்னர் புத்த மதக் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இதுஇரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் இறைவன்விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது. இக்கோயில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது. இக்கோயில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது. அங்கோர்என்பது நகரத்தையும், வாட்என்பது கோயிலையும் குறிக்கும்கெமர் மொழிச் சொல்.

அங்கோர் வாட், சியம் ரீப்பின் நவீன நகரத்தின் வடக்கே 5.5 கிலோமீட்டர் தொலைவில், முந்தைய தலைநகரமான பாஃபுஆனுக்கு சற்றே தென் கிழக்கில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தொடக்க வடிவமைப்பும், கட்டுமானமும் 12ஆம் நூற்றாண்டின் பாதியில் இரண்டாம் சூரியவர்மனால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்க பட்டிருந்தாலும் அரசனின் மாநிலக்கோவிலாகவும், தலைநகரமாகவும் செயல்பட்டு வந்தது. இக்கோயிலின் உண்மையான பெயர் தெரியவில்லை. இரண்டாம் சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக்கோயில் முழுத்தோற்றம் பெற்றது. 1177ல் தோராயமாக இரண்டாம் சூரியவர்மன் மறைந்து 27 வருடங்களுக்கு பின், அங்கோரை கெமரின் பாரம்பரிய எதிரிகளான சம்ப்பாக்கள் கைபற்றினர். அதன் பின்னர் புதிய அரசர் ஏழாம் ஜயவர்மன் சிறிது தூரம் வடக்கே தள்ளி தன் புதிய தலைநகரத்தையும், மாநில கோவிலையும் நிறுவினார். 13ஆம் நூற்றாண்டின் போது, அங்கோர் வாட், இந்து கோவிலில் இருந்து தேராவத புத்த மத பயன்பாட்டுக்காக இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கோர் வாட், அங்கோர் கோயில்களிலேயே மிகவும் அசாதாரணமானது, 16ஆம் நூற்றாண்டிலேயே அக்கோயில் ஒரளவு புறக்கணிக்கப்பட்டு வந்தாலும் முழுமையாக கைவிடப்படவில்லை, ஏனெனில், அக்கோயிலின் அகழி காட்டின் அத்துமீறலில் இருந்து சிறிது பாதுகாப்பளித்தது. மேற்கத்திய பார்வையாளர்கள் இக்கோயில் கெமர் மக்களால் கட்டப்பட்டது என்பதை நம்ப இயலாமல் இக்கோயில் உரோம சகாப்தத்தின் போதே கட்டப்பட்டது எனத் தவறாக தேதியிட்டனர். ஆனால், அக்கோயிலைப் புதுப்பித்த போது மேற்கொள்ளப்பட்ட கல்வெட்டுகளின் ஆய்வில் அது மற்ற அங்கோர்களிருந்து தனித்து இருப்பதை உணர்ந்தனர். 20ஆம் நூற்றாண்டின் போது தொடங்கப்பட்ட புதுப்பித்தல் பணி, உள்நாட்டுப் போர் மற்றும் 1970, 1980களின் கெமர் ரூச்சின் ஆட்சியினால் நிறுத்தப்பட்டது. ஆனால் மற்ற அங்கோரியன் சிலை திருட்டு மற்றும் சேதத்தை ஒப்பிடும் போது அங்கோர் வாட்டின் சேதம் குறைவே.

கட்டமைப்பு

இக்கோயில் கடவுள்களின் இருப்பிடமாகக் கருதப்படும் மேரு மலையினைக் குறிப்பதாக உள்ளது. மத்திய கோபுரங்கள், மேரு மலையின் ஐந்து சிகரங்களைக் குறிக்கின்றது. சுவர்களும், அகழியும், பிற மலைத்தொடர்களையும், கடலையும் குறிக்கின்றது. இக்கோயில் நகரத்தில் இருந்து சிறிது உயர்த்தப்பட்ட ஒரு தளத்தின் மீது அமைந்துள்ளது. மூன்று சதுர கூடங்கள், மத்திய கோபுரத்துடன் இணைந்துள்ளது. இக்கூடங்களும், கோபுரமும் அரசன், பிரம்மா, சந்திரன் மற்றும் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கபட்டுள்ளது என கூறபடுகிறது.முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் (ceiling) தாமரைவடிவஅலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர்நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச்சுவரின் வெளிப்புறம் தூண்களோடுகூடிய பலகணிகள், அப்சரஸ்கள்மற்றும் விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எல்லா மண்டபங்களின் சுவர்களிலும்அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன. முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழிமூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச்சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து அணுகப்படுகிறது. இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக்காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன. மூன்றாவது மண்டபம், உயர்ந்த மேல்தளத்தின் மீது ஒன்றோடொன்றுமண்டபங்களால்இணைக்கப்பட்ட ஐந்துகோயில்களைச் சூழ அமைந்துள்ளது. மண்டபங்களின்கூரைகள்பாம்புகளின்உடல்களையும், சிங்கம் அல்லதுகருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேற்குப் பக்கத்திலுள்ள முதன்மைக் கோயிலின் வெளி முற்றத்தில் இரண்டு நூலகங்கள் அல்லது சிறிய கோவில் அமைப்புக்கள் உள்ளன.அகழிக்கு வெளியே அதனைச் சுற்றி புல்வெளிகளமைந்த பூங்காக்கள் உள்ளன.

இன்றைய அங்கோர் வாட்

1982 மற்றும் 1992ன் மத்தியில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் இக்கோயிலின் புதுப்பித்தல் பணியினை செய்தது. அப்போதிலிருந்து இக்கோயிலின் சுற்றுலா வரவு பெருகியது. இக்கோயில் 1992ல் நிறுவப்பட்ட அங்கோரின் உலக பாரம்பரிய களத்தின் ஒரு பகுதியாக இருப்பதனால் இதைப் பராமரிக்க கம்போடிய அரசுக்கு ஊக்கமும், நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. ஜெர்மன் அப்சரா பாதுகாப்பு திட்டம், இக்கோயிலின் அலங்காரத்தையும், கட்டமைப்பையும் பேணும் தேவதாக்களைப் பாதுகாத்து வருகிறது. உலக நினைவிடங்கள் நிதியம், 2008ல் பாற்கடல் கூடத்தை பல ஆய்வுகளுக்கு பின்னர் புதுப்பிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளது, இப்பணியின் முக்கிய கட்டம் 2012ல் முடிவடைந்தது, இறுதிக் கட்டமாக முக்கோண வடிவிலான அலங்கார கும்பம் 2013ல் நிறுவப்படும் எனத் தெரிகிறது. 2004 மற்றும் 2005ல், கம்போடிய அரசாங்க புள்ளிவிவரங்களின் படி முறையே, 561,000 மற்றும் 677,000 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இரண்டு ஆண்டுகளாக கம்போடியாவுக்கு வருகை புரிந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலா வர்த்தகம் இக்கோயிலைப் பாதுகாக்க பெரும் அளவில் உதவியது. ஆனால் அதிக அளவு பார்வையாளர்களின் வரவால் இக்கோயிலின் சுற்று வட்டாரம் மாசு பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இதைக் கட்டுப்படுத்த யுனெஸ்கோவும் அதன் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவும் சேர்ந்து அதனைப் பாதுகாக்க முடிவு கொண்டது.

1443628374866

1443628551358
1443628640188

அங்கோர் வாட் தமிழின் பெருமை ! தமிழனின் அருமை! தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.

: உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்/தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? ஆம் அது தான் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில். இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா ?, “விஷ்ணு” கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே ” பெரியது “! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிசம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதைவடையத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு ” António da Madalena ” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் ” is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.” என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot’ என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged.” என்று குறிப்பிட்டுள்ளார் !! .பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!.இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக” பொறிக்கப்பட்டுள்ளது !.இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே !!

எளிய கட்டளைகள்

இன்று பின்வரும் எளிய கட்டளைகள் (commands) மற்றும் அதற்கான வெளியீடுகளை
(output) காண்போம்.
1.W
இந்த கட்டளை கணிப்பொறியில் login செய்து இருப்பவரது தகவல்களை தரும்(
நேரம், அவரின் பெயர் கணிப்பொறியாக (user 1 , or name1), மற்றும் மேலும் பல
தரவுகளை தருகிறது.

viki@viki-ubuntu:~$ w
22:17:12 up 1:25, 2 users, load average: 0.50, 0.43, 0.38
USER TTY FROM LOGIN@ IDLE JCPU PCPU WHAT
viki :0 :0 20:52 ?xdm? 8:29 0.27s /sbin/upstart –
viki pts/3 :0 20:54 0.00s 0.27s 0.00s w

22.Screenshot from 2015-09-28 22:18:41

2. W -n
இது தரவுகளின் உள்ளீட்டைப் பொறுத்து வெளியீடானது அமையும்.

viki@viki-ubuntu:~$ w -n
w: invalid option — ‘n’

Usage:
w [options]

Options:
-h, –no-header do not print header
-u, –no-current ignore current process username
-s, –short short format
-f, –from show remote hostname field
-o, –old-style old style output
-i, –ip-addr display IP address instead of hostname (if possible)

–help display this help and exit
-V, –version output version information and exit

For more details see w(1).

3.W -i
இது ip address போன்ற தகவல்களை தருகிறது.

viki@viki-ubuntu:~$ w -i
22:20:10 up 1:28, 2 users, load average: 0.40, 0.41, 0.38
USER TTY FROM LOGIN@ IDLE JCPU PCPU WHAT
viki :0 :0 20:52 ?xdm? 9:11 0.27s /sbin/upstart –user
viki pts/3 :0 20:54 2.00s 0.31s 0.00s w -i

w – n

தேவையான தரவுகளை தருகிறது.

(E.g.)

viki@viki-ubuntu:~$ w -n
w: invalid option — ‘n’

Usage:
w [options]

Options:
-h, –no-header do not print header
-u, –no-current ignore current process username
-s, –short short format
-f, –from show remote hostname field
-o, –old-style old style output
-i, –ip-addr display IP address instead of hostname (if possible)

–help display this help and exit
-V, –version output version information and exit

For more details see w(1).

4.tty
Name of the terminal
உள்ளீட்டு தேவையான சாதனம் கணினியில் இணைக்கப்பட்ட கோப்பின் பெயர்

( print the file name of the terminal connected to the standard input )

/dev/pts/3

5.tty – version
Tty பற்றிய முழுத்தகவல்களையும் ஆங்கிலத்தில் தருகிறது.

viki@viki-ubuntu:~$ tty –version
tty (GNU coreutils) 8.23
Copyright (C) 2014 Free Software Foundation, Inc.
License GPLv3+: GNU GPL version 3 or later <http://gnu.org/licenses/gpl.html>.
This is free software: you are free to change and redistribute it.
There is NO WARRANTY, to the extent permitted by law.

Written by David MacKenzie.

6.date
இன்றைய கிழமை, மாதம், நாள், மணி, நிமிடம், நொடி, காலப் பொழுது , வருடம்
ஆகிய மொத்த விவரங்களும் ஒரே வரியில் காட்டுகிறது.

(E.g)

viki@viki-ubuntu:~$ date
Mon Sep 28 22:22:59 IST 2015

date –help ல் அனைத்து வகையான உதவிகளும் உள்ளன.

இதே நாளில் இங்கிருந்து உலகின் எந்த நாட்டின் நேரத்தையும் இணைய வசதியில்லாமலே
பார்க்க முடியும்.

(எ.கா)
$ TZ=’Australia/Sydney’ date
Tue Sep 29 01:46:18 AEST 2015
$ TZ=’China/ Beijing’s date
Mon Sep 28 15:47:35 China 2015

7. Who
கணினியில் லாக் இன் (login) செய்துள்ள பயனரின் குறிப்பிடத்தக்க சில தகவல்களை
தருகிறது.

viki@viki-ubuntu:~$ who
viki :0 2015-09-28 20:52 (:0)
viki pts/3 2015-09-28 20:54 (:0)

நான் இன்று இணையத்தில் உலாவும் போது சில வலைப்பூக்களை பார்த்தேன்
அவைகளில் சில
1.www.kaniyam.com
2.gnutamil.blogspot.in
3.https://nithyashrinivasan.wordpress.com
மேற்சொன்ன இணைய தளங்களில் லினக்ஸ் மட்டும் இன்றி மேலும் தகவல்களை கற்றுக்
கொள்ள முடியும்.

மேலும் சில கட்டளைகள் அதன் பயன்கள்

 

சில கட்டளைகள்

1.நாள் காட்டியின் மேலும் சில கட்டளைகள்:

Cal 1994
1994 ம்வருடத்தின் நாட்காட்டி.

cal Command
cal Command

 

2.cal Janu 2016
ஜனவரி மாதத்தின் 2016 வருட மாத நாட்காட்டி (calendar)

viki@viki-ubuntu:~$ cal Janu 2016
January 2016
Su Mo Tu We Th Fr Sa
1  2
3   4   5   6   7   8    9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31

3.uname -a என்னும் கட்டளை  கணினியின் பல தரவுகளை ஒரே இடத்தில் தருகிறது.

viki@viki-ubuntu:~$ uname -a
Linux viki-ubuntu 3.19.0-15-generic #15-Ubuntu SMP Thu Apr 16 23:32:01 UTC 2015 i686 athlon i686 GNU/Linux

1.கெர்னல் பெயர் (Kernal name)
2.கணினியின் பெயர்(host name)
3.கெர்னல் வெளிவந்தது (Kernal Release)
4. கெர்னல் வெர்ஷன் (version)
5.வன்பொருள் தளம்(hardware platform)
6.இயங்குதளம்(operating system)

viki@viki-ubuntu:~$ uname -m{வன்பொருள் தளம்(hardware platform)}
i686

viki@viki-ubuntu:~$ uname -n{கணினியின் பெயர்(host name)}
viki-ubuntu
viki@viki-ubuntu:~$ uname -o{இயங்குதளம்(operating system)}
GNU/Linux
viki@viki-ubuntu:~$ uname -p{Processor}
athlon
viki@viki-ubuntu:~$ uname -r{கெர்னல் வெளிவந்தது (Kernal Release)}
3.19.0-15-generic
viki@viki-ubuntu:~$ uname -s{கெர்னல் பெயர் (Kernal name)}
Linux
viki@viki-ubuntu:~$ uname -v{கெர்னல் வெர்ஷன் (version)}
#15-Ubuntu SMP Thu Apr 16 23:32:01 UTC 2015
viki@viki-ubuntu:~$ who
viki :0 2015-09-27 17:49 (:0)
viki pts/5 2015-09-27 18:25 (:0)

viki@viki-ubuntu:~$ w
20:18:17 up 2:29, 2 users, load average: 0.15, 0.27, 0.30
USER TTY FROM LOGIN@ IDLE JCPU PCPU WHAT
viki :0 :0 17:49 ?xdm? 12:48 0.33s /sbin/upstart –user
viki pts/5 :0 18:25 0.00s 0.24s 0.00s w

 

கட்டளைகள் அதன் பயன்கள்

பின்வரும் கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாக shell prompt (அ) terminal ல் உள்ளிட்டு அதற்கான வெளியீடுகளை காணலாம் .(Input==>output)

1.date
இது இன்றைய கிழமை,மாதம், தேதி, நேரம், நிமிடம், நொடி ,வருடம் ஆகியவைகளை தருகிறது.

(e.g) Shankar@viki-ubuntu:~$date
Sat Sep 26 22:11:23 IST 2015

2.cal
இம்மாத நாட்காட்டி(calender) ஐ தருகிறது.

September 2015
Su Mo Tu We Th Fr Sa
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30

3.hostname
இது கணினியின் பெயரை நாம் சேமித்தபடி காட்டும்

(ex) Shankar@viki-Ubuntu:~$hostname
Viki-Ubuntu

4.uname
இது கணினியின் இயங்குதளம் (operating system)ன் பெயரை தரும்
(Ex)Shankar@viki-Ubuntu:~$uname
Linux

Commands- ஐ இயக்குதல்

Commands- ஐ இயக்குதல்

GNU/Linux commands அனைத்தும் shell promptல்  இயக்கப்படும்.இவை பொதுவாக($)குறியீட்டின் மூலம் வெளிப்படும்.இதனை command line என்போம்.

     எனவே $ வெளிப்பட்டபின் அதனைத் தொடர்ந்து நாம் command -ஐ type செய்ய வேண்டும்.
பின்னர் enter அழுத்துவதன் மூலம் அந்த command ஆனது execute செய்யப்படும்.

ஒரு நேரத்தில் ஒரு command -ஐ மட்டும் இயக்க முடியும்.

முதலில் கணினியில் உபுண்டு இயங்குதளத்தை நிறுவி அல்லது லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவி command என்னும் கட்டளைகளை execute செய்யலாம்.
அல்லது உங்கள் கணினியில் ஏற்கனவே இருக்கும் இயங்குதளத்தில் மேல் VM என்னும் tool ஐ நிறுவி execute செய்யலாம்.

இதனை CD/DVD அல்லது USB ல் காப்பி செய்தும் நிறுவலாம்

http:// www.Ubuntu.com/download/Ubuntu/download
இந்த லிங்க் ஐ சொடுக்கி தரவிறக்கலாம்.

இவை ISO file ஆக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு www.kaniyam.com ல் விளக்கங்கள் உள்ளது.

(Learn GNU Linux in Tamil-Part1.pdf) file ல் விளக்கங்கள் உள்ளன.

மூலம்: www.kaniyam.com

வாட்ஸ் அப்பில் படித்து நான் ரசித்தவை

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது

வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D – விட்டம். R – ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார்.

சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.)

நான் கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே…

நான்: இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம் என்ன? ஐயா.

ஆசிரியர் : அது தான் வட்டத்தின் சுற்றளவு சூத்திரம் என்று கூறினேனே?

நான்: சதுரம் மற்றும் செவ்வகம் சுற்றளவு சூத்திரங்களில் இந்த Pi வரவில்லையே.

ஆசிரியர்: இப்போது நான் வட்டத்தின் சுற்றளவு பற்றிதானே பாடம் நடத்துகிறேன் நீ எதற்காக சதுரம் செவ்வகத்தை பற்றி இங்கே கேட்கின்றாய்.

நான்: ஐயா எனது சந்தேகம் சதுரத்தின் சுற்றளவிற்கு 4A எனவும், A என்பது பக்கத்தின் நீளம் என்று கூறினீர்கள். செவ்வக சுற்றளவிற்கு 2LB எனவும், L = நீளம் எனவும், B = அகலம் எனவும் கூறினீர்கள்.அது போல Pi என்பது என்ன சற்று தெளிவாக கூறுங்களேன்.

ஆசிரியர்: அதுவா, Pi is a constant value.

இருப்பினும் நான் கேட்ட 22/7 என்பது எப்படி வந்தது என அவரால் விளக்கமளிக்க முடியவில்லை. எனக்கும் விளங்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் இரு தினங்கள் வகுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, இது போன்ற கேள்விகளை இனி கேட்க மாட்டேன் என்ற உத்தர வாதம் தந்து உள்சென்றேன்.

இச்சம்பவத்தை மறந்து சிலநாள் கடந்த பின்பு எதேட்சயாக இதன் விளக்கம் கிடைத்தது.

எனது தாத்தா எங்கள் ஊரின் மிகச்சிறந்த தச்சர் எனும் பெயர் பெற்றவர். எங்கள் ஊர் கோயிலின் தேர் சக்கரங்கள் பழுதுபட்ட காரணத்தினால் அச்சகரங்களை மாற்றும் பணி எனது தாத்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவருக்கு எழுத படிக்க தெரியாத காரணத்தினால் தேவையான சாமான்களை பட்டியலிடும் பணிஎன்னிடம் வழங்கப்பட்டது.(உண்மையில் தினிக்கப்பட்டது). தாத்தா ஒவ்வொன்றாக கூற நான் எழுத வேண்டும்.

அப்படி அவர் கூறி வரும் போது வந்த ஒரு வாக்கியம் என்னை நெருடியது. அவ்வாக்கியம்,

ஐந்தடி உயர சக்கரத்திற்கு 15அடி 9 அங்குல நீள இரும்பு பட்டை, (இரும்பு பட்டை என்பது மரக்கட்டை தேயாமல் இருக்க சக்கரத்தில் ஒட்டப்படும் இரும்பு ). 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி நீள இரும்பு பட்டை.

இதில் வந்த 7 அடிக்கு 22 அடி என்பது எங்கோ கேட்டதாக நினைவுக்கு வர, என் தாத்தாவிடம் எப்படி 7 அடி உயர சக்கரத்திற்கு 22 அடி என கணக்கிட்டீர்கள் என்று வினவினேன்.

பழைய சக்கரங்கள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்று ஏழடி உயர சக்கரத்தின் ஒரு இடத்தில் குறியிட்டு அக்குறிக்கு நேராக மண்ணிலும் குறித்துக்கொண்டு, சக்கரத்தை ஒரு முழு சுற்று வரும் வரை தள்ளிக்கொண்டு வந்து மீண்டும் சக்கரத்தில் குறியிட்ட பகுதி மண்ணை தொட்ட இடத்தில் குறியிட்டார். மண்ணில் முதலில் குறியிட்ட இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்குமான தொலைவை அளந்தால் சரியாக 22 அடி வந்தது.

அதாவது சக்கரத்தின் விட்டம் 7 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 22 அடி. சக்கரத்தின் விட்டம் 1 அடியாக இருந்தால் அதன் சுற்றளவு 3 அடி 1.7 அங்குலம் (3.142) என விளக்கினார்.

இந்த விளக்கம் என் தாத்தாவுக்கு எப்படி தெரிந்தது? அவருடைய அப்பா சொல்லிக்கொடுத்தார். நானும் சிலவற்றை தெரிந்துகொள்ள அவரிடம் சில விளக்கங்கள் கேட்டேன். அதற்கு என் தாத்தா கூறிய வார்த்தைகள் தான் என்னை மிகவும் பாதித்தது.

அவ்வார்தைகள்…..

உனக்கெதற்கு சாமி இந்த பொழப்பு நல்லா படிச்சு பெரியஉத்யோகத்

ஆண்டாண்டு காலமாக செய்து வந்த குலத்தொழிலை கேவலமாக நினைக்கும் தலைமுறையில் பிறந்ததை என்னி வெட்கமும் வேதனையும் அடைந்தேன்..

ஆனாலும் ஒரு தச்சு தொழிலாளியிடமிருந்து இத்தகைய கணித சூத்திரத்தின் விளக்கம் கிடைக்குமானால், மற்ற மரபு வழி தொழிளாலர்களிடம் இருந்து ரகசியங்களும் நுணுக்கங்களும் எவ்வள்வு கிடைக்கும்??? தற்காலத்தில் அவை என்ன ஆனது???

எதனால் பள்ளி கல்வி எனும் பெயரில் இளம் தலைமுறையினர் முட்டாளாக்கப்படுகின்றனர்????

உலகின் எந்த பகுதியிலும் இல்லாத அளவு சுய தொழில் மூலம் உண்டு வாழ்ந்து வந்த சமூகம் ஐந்துக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்க வெளிநாடுகளுக்கு ஓடுவதன் காரணம் என்ன???